பந்தல் காய்கறி விவசாயிகள் சங்க கூட்டம்

பந்தல் காய்கறி விவசாயிகள் சங்க கூட்டம்

Update: 2022-12-12 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சர்க்கார்பதி, சின்னப்பம்பாளையம், கிழவன் புதூர், பெரியபோது, சேத்துமடை, நஞ்சேகவுண்டன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் 1,000 ஏக்கரில் பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற பந்தல் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பந்தல் காய்கறிகளை இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக நஞ்சேகவுண்டன்புதூரில் பந்தல் காய்கறி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கம் சார்பில் தனியாக காய்கறி விற்பனை நிலையம் அமைப்பது, கிராமங்கள்தோறும பந்தல் காய்கறி விவசாயிகள் குழுக்களை உருவாக்கி, அவற்றை நிறுவனமாக பதிவு செய்வது, அதற்கு செயல் அதிகாரியை நியமிப்பது, மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் மானிய திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொள்ளாச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், அட்மா குழு தலைவர் பிரகாஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்