தாராபுரத்தில்தாராபுரத்தில்இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நடக்கிறது. இதையடுத்து மாநில தலைவரை வரவேற்கும் வகையில் தாராபுரம் நகர் முழுவதும் பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொள்ளாச்சி சாலையில் ஒரு நகைக்கடை அருகே வைக்கப்பட்ட வரவேற்பு பேனரை மர்ம ஆசாமிகள் கிழித்து சேதப்படுத்திச் சென்று விட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், செயலாளர் கே.எஸ்.ராஜா, துணைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேனரை கிழித்த மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் கோரிக்கை விடுத்தார். மேலும் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.