காங்கயம் பஸ்நிலையம், சென்னிமலை ரோடு, போலீஸ்நிலையம் அருகே உள்ள ரவுண்டானா உட்பட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் தனியார் கடைகளின் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், இறப்பு சம்பந்தான அறிவிப்புகள்,கோவில் திருவிழாக்கள் என பல்வேறு விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. அதனை வாகன ஓட்டிகள் பார்க்கும்போது விளம்பரங்களில் கவனம் செலுத்தி சாலையை பார்க்க மறக்கின்றனர்.
அதுபோன்று தற்காலிகமாக வைக்கப்படும் அந்த விளம்பர பதாகைகள் உறுதியாக வைக்கப்படுவது இல்லை. இதனால் அவை காற்றில் தூக்கி் வீசப்படுகின்றன. மழையால் சாலையில் சாய்ந்து விழுகின்றன.எனவே சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதோடு, அதனை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கயம் பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.