சந்தையில் ரூ.600-க்கு விற்கப்பட்ட வாழைத்தார்
சந்தையில் ரூ.600-க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை மற்றும் பாப்பாக்குடி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தை நடைபெற்றது. இதில் கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் குலைகள் விற்பனை செய்யப்பட்டன. 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாழைத்தார் ஒன்று ரூ.600, ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் குலை ஒன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொருட்களின் விலை சற்று அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.