ரூ.2¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

சத்தியில் ரூ.2¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

Update: 2022-08-29 20:38 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், புது வடவள்ளி, அரசூர், உக்கரம், செண்பகப்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 939 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் கதலி (கிலோ) ரூ.50-க்கும், நேந்திரம் ரூ.45-க்கும் ஏலம் போனது. தேன் வாழை ரூ.600-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், மொந்தன் ரூ.250-க்கும் விற்பனையானது.

சத்தியமங்கலம் அருகே உள்ள காளியூரை சேர்ந்த அம்மாசை குட்டி என்ற விவசாயி ஆளுயர பூவன் ரக வாழைத்தார் ஒன்றை ஏலத்திற்கு எடுத்து வந்திருந்தார். இந்த தாரை விவசாயிகளும், வியாபாரிகளும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். இந்த வாழைப்பழ தாரை வியாபாரிகள் போட்டி போட்டு ரூ.900-க்கு ஏலம் எடுத்தார்கள். மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்துக்கு ஏலம் போனது. விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் வாழைப்பழங்களின் தேவை அதிகரித்தது. இதனால் வாழைத்தார்கள் விலை உயர்ந்து விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்