நாளை முதல் 61 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை

நாளை முதல் 61 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை விதித்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-04-13 18:45 GMT

ராமநாதபுரம், 

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன்வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் நாளை (15-ந்தேதி) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்