அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-06 11:51 GMT

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துகளை தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரப்பி வருகிறார். எனவே அதுபோன்ற கருத்துகளை அவர் பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோட்டிட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "செந்தில்பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதார்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு செந்தில்பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும்.

அப்போது, நிர்மல்குமார் தாக்கல் செய்த பதில் மனுவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிட்டார். செந்தில்பாலாஜி வழக்கு குறித்து டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை நிர்மல்குமாருக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்