மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

Update: 2023-09-03 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் தாலுகா, நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே எழுந்தருளியுள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி இரவு கருப்பண்ணசாமி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்கள் எடுத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்