நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Update: 2023-08-20 18:45 GMT

நீடாமங்கலம் தஞ்சை சாலை பகுதியில் அமைந்துள்ள முச்சந்தியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சக்தி கரகம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் முச்சந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பலர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்