உச்சி காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

கீழகபிஸ்தலம் உச்சி காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

Update: 2023-07-09 21:15 GMT

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே கீழ கபிஸ்தலம் பூக்கார தெருவில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்