தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

கழுக்காணிமுட்டத்தில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது

Update: 2023-06-10 18:45 GMT

மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தில் அமைந்துள்ள கிராம தெய்வமான தில்லை காளியம்மன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு , பால்குட திருவிழா நடந்தது. பால் குட திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடத்தை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். மேள தாளம், வாணவேடிக்கை முழங்க, முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா சென்ற பக்தர்கள் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடத்திலிருந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. இந்த பால்குட திருவிழாவில், ஏராளமான குலதெய்வ காரர்களும், ஊர் பொதுமக்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்