செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் பால்குட விழா
திருப்பனந்தாள் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் செல்வமுத்து மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடந்தது. முன்னதாக செஞ்சடையப்பர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.