மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறையில் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, பால்குடம் எடுப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். முக்கிய நிகழ்வாக நேற்று பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் செந்துறை ஏந்தல் ஏரிக்கரையில் சக்தி அழைத்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.