மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
செம்பனார்கோவில் மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் கண்டியன்குளம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 2-வது வாரம் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் செம்பனார்கோவில் திருச்சம்பள்ளி கடிச்சம்பாடி பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் சார்பாக 22-ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா நடந்தது. மேலமுக்கூட்டு விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சக்திகரகம், பால்குடம் அலகுகாவடி எடுத்து மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக 100-கணக்கான பக்தர்கள் கோவில் வந்தடைந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.