வடிவுடையம்மன் கோவிலில் பால்குட விழா
கண்டியூர் வடிவுடையம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே வில்லியநல்லூர் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் வருமுன் காக்கும் வடிவுடையம்மன் கோவிலில் பால்குடம், கரக திருவிழா நேற்று நடந்தது.முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம், அலகு காவடி, இளநீர் காவடி ஆகியவற்றை எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கண்டியூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.