கோவில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

Update: 2023-04-11 19:30 GMT

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டி அருகே பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநில அளவிலான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சுமார் 30 அடிக்கு மேல் உள்ள நடப்பட்டு மரத்தின் உச்சியில் 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை குடத்தில் போட்டு தொங்க விடப்பட்டது.

இந்த போட்டியில் சேலம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த 11 அணி வீரர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரத்தில் ஏறினார். முடிவில் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த அணியினர் வழக்கு மரத்தில் ஏறி வெற்றி பெற்றனர். 

மேலும் செய்திகள்