திரவுபதி அம்மன் கோவிலில் பாலஸ்தாபனம் பூஜை

நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் பாலஸ்தாபனம் பூஜை

Update: 2023-05-29 18:45 GMT

நாகூர்:

நாகூர் குயவர் தெருவில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில் பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணிக்கான பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து கோவிலில் யாகம், ஹோமம் நடத்தப்பட்டு புனித நீரால் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்