விக்கிரமசிங்கபுரம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் பாலாலயம்

விக்கிரமசிங்கபுரம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் பாலாலயம் நடந்தது.

Update: 2022-12-15 19:46 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாலாலயம் நேற்று நடைபெற்றது. காலையில் 9 கும்பங்களில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சீனிவாசன் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார் பாலாலயம் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கோவில் நிர்வாக அதிகாரி போத்திச் செல்வி, தக்கார் ரேவதி, கோவில் மாணியம் செந்தில் கிருஷ்ணன் மற்றும் சுப்பராவ், மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்