பாம்பலம்மன் கோவிலில் பாலாலய விழா
நீடாமங்கலம் பாம்பலம்மன் கோவிலில் பாலாலய விழா நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பாம்பலம்மன் கோவிலில் திருப்பணி தொடக்கத்துக்கான பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது. விநாயகர், வீரன், பாம்பலம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.