கோவில்பட்டி அருகே பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ பங்கேற்பு
கோவில்பட்டி அருகே பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தில் டில்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு மங்கல இசையுடன் கணபதி பூஜையும், காப்பு கட்டுதல், கும்ப தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு கோவிலில் வலம் வந்து யாகசாலையில் எழுந்தருளியது. தீர்த்த குடத்தை பக்தர்களுடன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, அவருடைய மனைவி இந்திரா காந்தி எடுத்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள், கோ பூஜை, சுத்தி புண்ணியாக வாசனம் நடந்தன.
இதனை தொடர்ந்து வரும் 17- ம் தேதி காலை 10.10 மணிக்கு விமான கலச அபிஷேகம், தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகிறார்கள்.