மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி தக்வா ஜமாத், ஜித் மற்றும் மஸ்ஜித் தவ்பா ஜமாத், ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகையை மவுலவி ஹூசைன் மன்பஈ நடத்தி சொற்பொழிவாற்றினார். இதில் ஜமாத் நிர்வாகிகள் இனாயத்துல்லாஹ், அன்வர், இர்ஷாத் சேட், மகபூப்ஜான், அப்பாஸ் கில்மி, இக்பால், மன்சூர், நசீர், அப்துல் கனி, பிறை அப்பாஸ், ரஹீம் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.