தகராறில் பேக்கரி கண்ணாடி உடைப்பு

கும்பகோணம் அருகே தகராறில் பேக்கரி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-27 18:45 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே தகராறில் பேக்கரி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேக்கரி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பெருமாண்டி மெயின் ரோட்டை சேர்ந்த அசோகன் என்பவரது மகன் ராமசாமி (வயது34). இவர் கடந்த 1½ ஆண்டாக ஒப்பந்த அடிப்படையில் முத்துப்பிள்ளை மண்டபம் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் அண்ணல் அக்ரஹாரம் கூட்டுறவு நகரை சேர்ந்த அருண்குமார் மகன் வெங்கடேசன் (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

கண்ணாடி உடைப்பு

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ராமசாமி தொலைபேசியில் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசியபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் முல்லை நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (50) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பேக்கரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ராமசாமி நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், மணிவண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்