பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூர்
பாச்சாரப்பாளையம் பிரேம்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தை 'வன்கொடுமை நிகழும் பகுதி' என அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கிழக்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தணிகைசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அமர்நாத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் ஸ்டீபன்ராஜ், சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.