பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-16 18:07 GMT

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணிபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பகுஜன் சமாஜ் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும். வேலூர் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் சங்க நிர்வாகி மோதிலால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்