மத்திய அரசு தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையை அதிகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று சிலிண்டர் விலையை மேலும் 50 ரூபாய் உயர்த்தி உள்ளனர். இதனால் சாமானிய மக்கள் வெகுவாக பாதித்துள்ளனர். தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் அவினாசி ஒன்றிய குழு சார்பில் அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி பாடல் பாடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.