வீடூர் அணையில் தரமற்ற தார் சாலைவைரலாகும் வீடியோவால் பரபரப்பு

வீடூர் அணையில் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-02-07 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடூர் அணை உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது ரூ.43 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ரூ.55 லட்சம் மதிப்பில் அணையின் கரையில் 4.5 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அத்திக்குப்பத்தை சேர்ந்த சிலர் வீடூர் அணைக்கு வந்தனர். அப்போது தார் சாலை தரமற்றதாக போடப்பட்டதாக வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இ்ந்த குற்றச்சாட்டு குறித்து வீடூர் அணையின் உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) ரமேசிடம் கேட்டபோது:-

பணி ஆணையின்படி 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 செ.மீட்டர் உயரத்தில் 3¾ அடி அகலத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலை இறுகும் தன்மை அடையும் முன்பே சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலையை பெயர்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அணையின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும்படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்