பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக போலீசார்

வாழப்பாடியில் பெண் போலீசுக்கு வளைகாப்பு சக போலீசார் நடத்தினர்.

Update: 2023-04-04 20:02 GMT

வாழப்பாடி

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 27). இவர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலேயே சக போலீசாக பணிபுரியும் பெண்கள் வளைகாப்பு நடத்தினர். அப்போது சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு தாம்பூலம் கொடுத்தும், அறுசுவை விருந்து வைத்தும் மகிழ்ந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்