தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை மீட்பு

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்கேட்பாரற்று கிடந்த பெண் குழந்தை மீட்பு

Update: 2023-08-10 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டு ஊழியர்கள் வந்து குழந்தையை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அந்த குழந்தையை மீட்டு தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். அந்த பெண் குழந்தை அங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து தெரியவில்லை. குழந்தையை ஆஸ்பத்திரி வளாகத்தில் போட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த குழந்தையின் விவரங்கள் தெரிந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதேபோல் நல்லம்பள்ளி தாலுகா டொக்குபோதனஅள்ளி கிராமத்தில் செயல்படும் குழந்தைகள் நல குழு தலைவரிடம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்