பாம்பு கடித்து பெண் குழந்தை இறந்தது.

பாம்பு கடித்து பெண் குழந்தை இறந்தது.

Update: 2023-05-27 19:20 GMT

அணைக்கட்டு

பாம்பு கடித்து பெண் குழந்தை இறந்தது.

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை கிராமத்தை அடுத்த அத்தி மரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் தனுஷ்கா நேற்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவரது பெற்றோர்கள் வீட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாம்பு ஒன்றுசிறுமியை கடித்துவிட்டு சென்றுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை வாயில் நுரையுடன் விழுந்து கிடந்ததை பார்த்த அவரது பெற்றோர்கள் அங்குள்ள நாட்டு மருத்துவத்தை நாடி உள்ளனர்.

நாட்டு மருத்துவம் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளாத தால் உடனடியாக குழந்தையை மலை அடிவாரத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். ஆனால் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் குழந்தை வரும் வழியே இறந்து விட்டது. இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரியான சாலை வசதி இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என அவர்கள் ஆதங்கப்பட்டனர். எனவே இந்த மலை கிராமத்திற்கு குறைந்த பட்சம் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காவது சாலைஅமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்