பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா நடந்தது.

Update: 2023-10-26 20:54 GMT

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பாபநாசம் அறிஞர் அண்ணா கார் ஓட்டுனர்கள் சங்க செயலாளர் சுரேஷ், சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்