பி.ஏ.பி. அலுவலகத்தில் வெள்ளக்கோவில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பி.ஏ.பி. அலுவலகத்தில் வெள்ளக்கோவில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-13 18:45 GMT

பொள்ளாச்சி

வெள்ளக்கோவில் பகுதிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது தொடர்பாக பி.ஏ.பி. அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் வெள்ளக்கோவில் விவசாயிகள் பி.ஏ.பி. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் மற்றும் போலீசார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சட்டப்படி திருமூர்த்தி அணையில் இருந்து எங்களுக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் விவசாயிகள் கண் துடைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கோர்ட்டில் அனுமதி பெற்று வெள்ளக்கோவிலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்