மின்சாரம் தாக்கி அய்யப்ப பக்தர் சாவு
மின்சாரம் தாக்கி அய்யப்ப பக்தர் சாவு
திருத்துறைப்பூண்டியில், மின்சாரம் தாக்கி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.
அய்யப்ப பக்தர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகன் செல்வகுமார்(வயது23).
மெக்கானிக் வேலை பார்த்து வந்த செல்வகுமார் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
நேற்று காலை குளித்துவிட்டு வீட்டில் தனது துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி அய்யப்ப பக்தர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு்த்தியது.