அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
எஸ்.புதூர் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே முசுண்டபட்டி கிராமத்தில் உள்ள சூறாவளி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி மற்றும் கோ பூஜையுடன் விழா ெதாடங்கியது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சூறாவளி அம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுர கலசங்களில் புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.