அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழா
திருச்சிற்றம்பலம் அருகே அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழா நடந்தது.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வல்லியா குளக்கரையில் பூரண புஷ்பகலாம்பாள் சமேத அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அடைக்கலம் காத்த அய்யனாருக்கும், அதன் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி, பால்குடம், இரவு மது எடுத்தல், கப்பரை எடுத்தல், பொங்கல் விழா மற்றும் காப்பு கலைதல் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வீரப்பன், சண்முகம் மற்றும் வலச்சேரிக்காடு கிராம மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.