அய்யனார் கோவில் தேரோட்டம்
வேதாரண்யம் அருகே அய்யனார் கோவில் ேதரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகுத்தகை கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, சாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர், மீண்டும் கோவிலை அடைந்தது. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.