அய்யா வைகுண்டர் ஊர்வலம்

பாவூர்சத்திரத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-02 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சுற்று வட்டார தலைமை பதியில் அய்யா வைகுண்டரின் அகில திரட்டு திருஏடு வாசிப்பு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி அகில திரட்டு ஊர்வலம் நடைபெற்றது. அய்யா கருட வாகனத்தில் குறும்பலாப்பேரியில் உள்ள அய்யா தாங்கலில் புறப்பட்டு, பாவூர்சத்திரம் வந்தடைந்தது. இரவு அய்யா வைகுண்டரின் பட்டாபிஷேக நிகழ்ச்சி, தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சுற்று வட்டார அய்யா வழி அன்பு கொடி மக்கள் சேவா சபையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்