அய்யா நிழல் தாங்கலில்தைத்திருவிழா
கொட்டங்காடு அய்யா நிழல் தாங்கலில் தைத்திருவிழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகே கொட்டங்காடு முத்துகிருஷ்ணாபுரம் அய்யா நிழல் தாங்கலில் தைத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
விழாவை முன்னிட்டு பணிவிடை, உச்சிப்படிப்பு, அய்யா கருடர் வாகனத்தில் பவனி நடந்தது. விழா நாட்களில் குதிரை, தொட்டில் அன்ன வாகனங்களில் பவனி, அகண்ட உகப்படிப்பு, வம்பான் அன்னதர்மம் வழங்கல், நிழல் நாகம், புஷ்பம், ஒட்டகம், யானை, குதிரை, வாகனங்களில் பவனி வருதல், பள்ளி உணர்தல், தவணபால் தர்மம் வழங்கல், வரி ஈனிமம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.