அய்யா நாராயணசுவாமி அன்புபதி அவதார விழா

திண்டுக்கல் அருகே அய்யா நாராயணசுவாமி அன்புபதி அவதார விழா நடந்தது.

Update: 2023-02-20 18:45 GMT

திண்டுக்கல்லை அடுத்த வாழைக்காய்பட்டியில், அய்யா நாராயண சுவாமி அன்புபதியின் 22-ம் ஆண்டு அவதார தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதானம் ஆகியவை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

அய்யா நாராயண சுவாமி அவதார தினமான நேற்று காலை 7 மணிக்கு பணிவிடை, ஊர் தர்மம் எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதானம், இரவு 7 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, சந்தனக்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து அய்யா நாராயண சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு பால் இலக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்