திருவாய்மொழி அம்மன் கோவிலில் ஐப்பசி கொடை விழா

வாசுதேவநல்லூர் அருகே திருவாய்மொழி அம்மன் கோவிலில் ஐப்பசி கொடை விழா நடந்தது.

Update: 2022-11-12 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே தலைவன்கோட்டையில் உள்ள திருவாய்மொழி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத கொடை விழா 5 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம், 508 திருவிளக்கு பூஜை, கும்பாபிஷேகம், அம்மனுக்கு வாசனை மலர்களால் புஷ்பாஞ்சலி, மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி, அக்னி காவடி, முளைப்பாரி ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகன சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா, பொங்கலிடுதல், கிடாய் வெட்டுதல், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்