அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-09-06 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று கொள்ளிடத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் நூர்தீன் தலைமை தாங்கினார்.குமார் வரவேற்றார். ஒன்றிய அவைத்தலைவர் தனஞ்செயம், மாவட்டத் துணைச் செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிசோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜனநாயகத்திற்கு மாறாக செயல்பட்டு வரும் தமிழக கவர்னர் ரவியை உடனடியாக திருப்பி அழைக்க வேண்டும். அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்த அயோத்தி சாமியாரை கைது செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.வரும் செப்டம்பர் 15-ந் தேதி மதுரையில்நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாநாட்டுக்கு திரளாக வாகனத்தில் செல்வது. சுவர் விளம்பரம், டிஜிட்டல் விளம்பரம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய முழுவதும் மேற்கொள்வது மற்றும் மாநாட்டில் நிதி வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்