பட்டிவீரன்பட்டி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரில் பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆசிரியைகள் ரம்யா, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊர்வலத்தின் போது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்றும், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெல்லூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கருப்பையா செய்திருந்தார். இந்த ஊர்வலத்தில் ஆசிரிய-ஆசிரியைகள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.