அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-26 19:15 GMT

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் அலையாத்திக்காடுகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை, கல்வித்துறை மற்றும் போலீசார் இணைந்து அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஊா்வலத்தை நடத்தினா்.முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி மன்னார்குடி சாலை வழியாக குமரன் பஜார், பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய தபால் நிலையம் சாலை, ரயிலடி வழியாக ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இங்கு ஆசியாவின் மிகப்பெரிய அலையதிக்காடு உள்ளது. அலையாத்திகாடுகள் பாதுகாப்பு தினத்தை இங்கு கொண்டாடுவதுதான் மிக சிறப்பு. அலையாத்திகாடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு மாணவர்களை இலவசமாக வனத்துறை சார்பில் அலையாத்திக்காட்டுக்கு அழைத்து செல்லப்படுவாாகள் என கூறினார்.ஊா்வலத்தில் முத்துப்பேட்டை துைண போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வனச்சரக அலுவலர் ஜனனி, வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்