வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

Update: 2023-03-10 10:25 GMT

அருள்புரம்

வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் அருகே சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் நடந்தது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமை வகித்து பேசும்போது " திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளருக்கு எதிராக சமூக விரோதிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். அமைதியாக வேலை பார்த்து வரும் தொழிலாளர்களாக நீங்கள் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என உங்கள் ஊரில் உள்ள கும்பத்தினருக்கு நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். யாருக்காவது ஏதேனும் பிரச்சினை என்றால் 24 மணிநேரமும் எங்களின் உதவியை நாடலாம். இதற்காக தனிப்பிரிவு கட்டுப்பாடு அறை எண்களும் பயன்பாட்டில் உள்ளன என்றார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் தனியார் நிறுவனத்தைத் சேர்ந்த 2500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

------------

Tags:    

மேலும் செய்திகள்