போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
உடுமலை
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான எம்.மணிகண்டன் வழிகாட்டுதல்படி, உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமிற்கு உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ன் மாஜிஸ்திரேடடு் ஆர்.மீனாட்சி தலைமை தாங்கி பேசினார். வக்கீல்கள் ஆர்.மகேஸ்வரன், எம்.சத்தியவாணி ஆகியோர் பேசினர். கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.