திருப்புவனம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

திருப்புவனம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது

Update: 2023-10-10 18:45 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் பேரூராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரத்தை முன்னிட்டு மாரத்தான் விழிப்புணர்வு நடைபயணம் திருப்புவனம் புதூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இருந்து நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடை பயணத்திற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு நடை பயணத்தை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு மாரத்தான் நடைபயணம் திருப்புவனம் புதூரில் இருந்து தொடங்கி மதுரை-மண்டபம் நெடுஞ்சாலை வழியாக 1-வது வார்டில் உள்ள கலைஞர் பூங்காவிற்கு வந்தடைந்தது. இதில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்