மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-07-01 18:52 GMT

திருப்பத்தூர் தாலுகா பழைய அத்திக்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பள்ளிகள் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்,

விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை சுனிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை செயலாளர் க.சாமு, கிளை பொருளாளர் அன்பழகன் மற்றும் துணை தலைவர் இரா.விக்னேஷ் மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்