மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
செய்யாறில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செய்யாறு
செய்யாறு ஒன்றிய வட்டார வள மையத்தின் சார்பில் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சத்யராஜ், செய்யாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் வாசித்தும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தும் செய்யாறு பஸ் நிலையம் வழியாக முக்கிய வீதியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் செய்யாறு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.