மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-24 12:36 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டஒருங்கிணைந்த பள்ளி கல்வி பெரணமல்லூர் வட்டார வளமையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 22-ந் தேதி பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ மதிப்பீடு அளவீட்டு முகாம் நடக்கிறது.

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவச்சான்று வழங்குதல், தனிபதிவு மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ், உதவி உபகரணங்கள், மருத்துவ ஆலோசனை ஆகியவை நடக்கிறது.

இதில் மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொள்வதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நெடுங்குணம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ஊர்வலத்தை செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம் குணசேகரன், தலைமை ஆசிரியை ஷீலாவளர்மதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரணாமல்லூர் வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் இசையருவி ஆகியோர் வரவேற்றனர்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் செண்பகவல்லி, சரவணராஜ், மொளுகு, சாந்தி, அரசு, பயிற்சி ஆசிரியர் ஜெயமேரி, காமாட்சி, மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பாளர்கள் உஷா, சுமதி மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்