மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

கெஜல்நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-16 17:19 GMT

கெஜல்நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள மேற்பார்வையாளர் சுபாஷ்சந்தர் தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சென்னமூர்த்தி, புவனேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்றுநர் ஜானகி, குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கோவிந்தன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தனர்.

ஊர்வலத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தயாளன், சிறப்பாசிரியர்கள் ரோஜினி, குமுதா, இயன்முறை மருத்துவர் சொருபராணி, பகல்நேர பராமரிப்பு மையத்தின் ஆசிரியர் மோகனாம்பாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோன்று ஆதியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர், சங்கர் உள்ளிட்ட ஆசிரியரகள்், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதுப்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் புதுப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வசந்தி மற்றும் புதுப்பேட்டை அரசு சமுதாய சுகாதார மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, மருத்துவர்கள் சுமன், வித்யா மற்றும் செவிலியர்கள், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சியாளர்கள் குமார், சேட்டு, பாலாஜி மற்றும் ஓவியா ஆசிரியர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்