மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

கொடைக்கல் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-11-16 11:22 GMT

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பிச்சாண்டி, குமார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுகுமாரன் வரவேற்றார்.

பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் சென்றவர்கள் ஊடல் ஊணம் ஒரு குறையல்ல, மாற்றுத்திறனாளியை வேற்றுமையாக பார்க்க வேண்டாம், மாற்றுத் திறனாளிகளை சகோதர, சகோதரிகளாக பார்க்க வேண்டும். கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

உடற்கல்வி ஆசிரியர் பிரின்ஸ், விஜயலட்சுமி, சிறப்பு ஆசிரியர்கள் முருகேசன், கிளாரா, பாபு, பிரேம்குமார் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்